சாதிவாரி கணக்கெடுப்பை விரைவுப்படுத்த வேண்டும்-பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தல்


சாதிவாரி கணக்கெடுப்பை விரைவுப்படுத்த வேண்டும்-பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 May 2023 6:45 PM GMT (Updated: 29 May 2023 6:46 PM GMT)

சாதிவாரி கணக்கெடுப்பை விரைவுப்படுத்த வேண்டும் என்று பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ராமநாதபுரம்

பரமக்குடி,

தமிழ் மாநில சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்றத்தேர்தலில் நிலைப்பாடு குறித்து விளக்க பொதுக்கூட்டம் பரமக்குடி மீனாட்சி மஹாலில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தலைவர் சு.ப.சிவபெருமாள் யாதவ் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், இணை பொதுச் செயலாளர் நித்தியானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சாதி வாரி கணக்கெடுப்பை விரைவுப்படுத்தி அனைத்து இன மக்களுக்கும் சமநீதி, சம உரிமை, சம வாய்ப்பு பெற்றிட விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து இன மக்களுக்கும் அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். அரசியல் நிர்ணய சட்டப்படி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனி தொகுதிகளை சுழற்சி முறையில் மாற்றி அமைக்க வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக அந்த முறை மாற்றப்படாமல் உள்ளது. எனவே மீண்டும் சுழற்சி முறையில் மாற்றி அமைக்க இந்திய தேர்தல் ஆணையமும், மத்திய - மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் இந்தி மொழியை இலவச விருப்ப படமாக கற்றுக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். கால்நடை மேய்ப்போர் நல வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் வேலூர் மண்டல குழு தலைவர் சின்னப்பா, செயலாளர் ஜஹாங்கீர், சிவகங்கை மாவட்ட மகளிர் அணி தலைவி மீனாட்சி லோகநாதன், சத்யா முருகானந்தம், குடியாத்தம் சம்பத் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story