கர்நாடகாவிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது.!


கர்நாடகாவிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது.!
x
தினத்தந்தி 25 July 2023 10:17 AM GMT (Updated: 25 July 2023 11:08 AM GMT)

காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிலிகுண்டுலு,

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, கபினிக்கு 25 ஆயிரம் கன அடி நீரும், கே.ஆர்.எஸ். அணைக்கு 48 ஆயிரம் கன அடி நீரும் வந்துகொண்டிருக்கிறது.

அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதன் காரணமாக, கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

சனிக்கிழமை மாலை திறக்கப்பட்ட இந்த தண்ணீரானது, தற்போது தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை அடைந்துள்ளது. இன்று காலை 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாடு - கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 2000 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story