தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம் 

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

முன்னதாக இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது அடுத்த 3 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story