சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி: நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்


சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி: நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்
x

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை முன்னிட்டு நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் 10-ந்தேதி (நாளை) முதல் 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில், மகாலிங்கபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் வாகனங்கள் புஷ்பா நகர் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு, ஸ்டெர்லிங் நிழற்சாலை வழியாக குளக்கரைச் சாலை செல்ல அனுமதிக்கப்படும்.

எனவே மேற்கண்ட சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை அதற்கேற்ப திட்டமிட்டு கொள்ளலாம் என்று சென்னை போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Next Story