மரணத்திலும் இணைபிரியா தம்பதி - கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் உயிரிழப்பு


மரணத்திலும் இணைபிரியா தம்பதி - கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் உயிரிழப்பு
x

ஈரோடு அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கவுந்தப்பாடி,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள புதுக்காட்டு வீதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 90). நெசவு தொழிளாளி. இவரது மனைவி அய்யம்மாள் (வயது 85). இவர்கள் வயது மூப்பின் காரணமாக மகன் பராமரிப்பில் இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று மதியம் முத்துசாமி காலமானார்.

இது குறித்த தகவல்களை உறவினர்களுக்கு தெரிவித்து இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்நிலையில் கணவர் முத்துசாமி இறந்த துக்கத்தில் அவரது மனைவி அய்யம்மாளும் சிறிது நேரத்தில் காலமானார்.

இதையடுத்து மாலையில் இருவரையும் ஒன்றாக கொண்டு சென்று அடக்கம் செய்தனர். திருமணமாகி 60 ஆண்டுகள் இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதி ஓரே நாளில் காலமானது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story