காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம் demonstration
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியின் மீது அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணைக்கு காரணமான பா.ஜ.க. அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கருங்கல்பாளையம் காந்திசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர்சாதிக், சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவகர் அலி, மாவட்ட துணைத்தலைவர் பாஷா, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் முகமது அர்சத் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.