கையில் பதாகையுடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த காங்கிரஸ் நிர்வாகி

கையில் பதாகையுடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த காங்கிரஸ் நிர்வாகி
x

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க பதாகையுடன் வந்த காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் தடுத்ததால் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க பதாகையுடன் வந்த காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் தடுத்ததால் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் நிர்வாகி

ராணிப்பேட்டை அருகே உள்ள அக்ராவரம் கிராமத்தை சேர்ந்தவர் கே.பாஸ்கர். காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளராகவும், பொதுக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்திருந்தார்.

மனுவில், ராகுல் காந்தியை மத்திய அமலாக்கத் துறை முன்பு ஆஜராவதற்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்திருந்தார். இந்த மனுவை கலெக்டரிடம் அளிக்க வரும் போது அவருடைய கையில் ராகுல்ஜி நான் உன்னுடன் இருப்பேன் என்ற வாசகம் அடங்கிய பதாகை ஒன்றை வைத்திருந்தார்.

தர்ணா போராட்டம்

இதனால் கலெக்டர் அலுவலகத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை உள்ளே விடுவதற்கு மறுத்தனர். இதனால் அவர் கையில் பதாகையுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் அப்புறப்படுத்த முயற்சித்தனர். இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர் கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் மனு அளித்துவிட்டு சென்றார்.

Next Story