கும்பாபிஷேக விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்


கும்பாபிஷேக விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
x

கும்பாபிஷேக விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட புண்ணிய தலமான மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 21 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஏப்ரல் 5-ந் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி கும்பாபிஷேக விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், கும்பாபிஷேகத்தை காண்பதற்காக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகை தர உள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் தேவையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் உடமைகளை பாதுகாத்து வைப்பதற்கும், காலணிகள் வைப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். தேவையான குடிநீர் வசதிகளை அனைத்து பகுதிகளிலும் ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்துக்கு தடையின்றி வாகனங்கள் நிறுத்துமிடம் அமைத்து முறையாக வரிசைப்படுத்தி, பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை நிறுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற பல்வேறு முன்னேற்பாடுகள் பணிகளை மேற்கொள்வது குறித்து துறை வாரியாக அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரைகளை வழங்கினார். கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (திருச்சி மண்டலம்) செல்வராஜ், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பரண்டு மதியழகன், போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிச்சாமி, இந்து சமய அறநிலையத்துறை செயற்பொறியாளர் (திருச்சி மண்டலம்) பெரியசாமி, மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் வேல்முருகன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story