தொடர் கனமழை: இன்று எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ?
சென்னையில் கடந்த 2 தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக மயிலாடுதுறை , கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story