புதிதாக 7 பேருக்கு கொரோனா


புதிதாக 7 பேருக்கு கொரோனா
x

புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர்

தமிழகத்தில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்து இருந்தது. இந்நிலையில் தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொது சுகாதாரத்துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகளும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 9 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 32 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story