ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்


ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 14 July 2023 8:32 PM GMT (Updated: 15 July 2023 11:46 AM GMT)

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.6,569-க்கு விலை போனது.

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.6,569-க்கு விலை போனது.

பருத்தி ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் நடந்தது. இந்த பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் விற்பனைக்காக பருத்தி பஞ்சுகளை கொண்டு வந்தனர். விவசாயிகள் மொத்தம் 2,069 லாட் பருத்தியை கொண்டு வந்தனர். சராசரியாக 300 டன் பருத்தியை ஏலத்துக்கு எடுத்து வந்தனர்.

ரூ.1.98 கோடி

இந்த பருத்தியை ஏலம் எடுக்க கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், குத்தாலம், சேலம், தேனி. ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

ஏலத்தில் வைக்கப்பட்டிருந்த பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.1.98 கோடி ஆகும்.இதில் அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.6,569-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5,879-க்கும், சராசரியாக ரூ.6.254-க்கும் விலை போனது.


Next Story