நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்


நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
x

ஆம்பூர் நகரமன்ற கூட்டத்தில் சொத்துவரி உயர்வு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் நகரமன்ற கூட்டத்தில் சொத்துவரி உயர்வு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகரமன்ற கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் ஏஜாஸ்அகமத் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஆறுமுகம், நகராட்சி ஆணையர் ஷகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சொத்துவரி உயர்வு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக நகரமன்ற தலைவர் தெரிவித்தார். அப்போது நகர மன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு பேச வாய்ப்பு தராததை கண்டித்தும், சொத்துவரி உயர்வு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நகர மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

தொடர்ந்து நகரமன்ற உறுப்பினர்கள் நகரமன்ற தலைவர் இருக்கைக்கு அருகில் சென்று தங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 27-வது வார்டு உறுப்பினர் ஹர்ஷவர்த்தன் தனக்கு அவருக்கு பேச வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறி தீர்மான நகலை கிழித்தெறிந்தார். இதனை தொடர்ந்து பா.ஜ.க. கவுன்சிலர் லட்சுமி பிரியா அன்பு, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தாமரைச்செல்வி, ராதா, வெங்கடேசன், ஜெயபால், சுயேச்சை கவுன்சிலர் நபீஸ் அஹ்மத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர் நூருல்லா உள்ளிட்ட கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தால் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story