பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்: விவசாயிகள் பயன்பெற பொதுசேவை மையங்கள் இன்று இயங்கும் கலெக்டர் தகவல்
பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் ஆகும். எனவே விவசாயிகள் பயன்பெற பொதுசேவை மையங்கள் இன்று இயங்கும் என்று கலெக்டர் தொிவித்துள்ளாா்.
இயற்கை இடர்பாடுகள் ஏற்படக்கூடிய காலங்களில் விவசாய பயிர்களுக்கு காப்பீடு செய்ய வழிவகை இல்லாதபோதும், விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமென்ற நோக்கத்துடன் தமிழக முதல்-அமைச்சர், விடுத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 21 (நாளை) வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 15-ந் தேதிக்குள் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் நாளை (திங்கட்கிழமைக்குள்) பயிர் காப்பீட்டு திட்டத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.