தெருக்களுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க கோரிக்கை
தெருக்களுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரில் வர்த்தக நல சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர தலைவர் உமர் கத்தாப் தலைமை தாங்கினார். நகர செயலாளர் இளங்கோவன் வரவேற்று பேசினார். கூட்டத்தில், அரும்பாவூர் கடை வீதியில் உள்ள தெரு விளக்குகளை சரி செய்து, கூடுதலாக தெரு விளக்குகளை அமைத்து தர பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்வது. அனைத்து தெருக்களுக்கும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வது. கடைவீதிகளில் பொதுக்கழிவறை ஒன்றுகூட இல்லை. எனவே பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பயன்படுத்தும் வகையில் பொது கழிவறை அமைத்து தர வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகர வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.