பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
மணவாளக்குறிச்சியில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி
மணவாளக்குறிச்சி,
குட்கா புகையிலை மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி பா.ம.க. சார்பில் மணவாளக்குறிச்சி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாநில செயற்குழு உறுப்பினர் ஹரிஹரன் தொடங்கி வைத்து பேசினார். குழித்துறை நகராட்சி கவுன்சிலர் ரவி, கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் ஆரோக்கியபுரம் அலெக்சாண்டர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வேல்ராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story