முதல் 5 நாட்கள் நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும்- அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி

முதல் 5 நாட்கள் நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும்- அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி
x

தமிழகத்தில் வருகிற 13-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. முதல் 5 நாட்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:-

நல்லொழுக்க வகுப்புகள்

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் வருகிற 13-ந் தேதி(திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. எனவே மாணவ, மாணவிகள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும். பள்ளிகள் திறந்து முதல் 5 நாட்கள் நல்லொழுக்கத்தை போதிக்கும் வகுப்புகள் நடத்தப்படும். இதில், தன்னார்வலர்கள், போலீசார் என பலரும் மாணவர்களுக்கு நல்லொழுக்கங்கள் குறித்து பாடம் எடுப்பார்கள். அதன் பிறகு வழக்கம் போல வகுப்புகள் நடைபெறும்.

மாணவர்களுக்கு பயம் கூடாது

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வருகிற ஜூலை அல்லது செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் பயம் இல்லாமல், தேர்வை எழுத முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story