உடல்நலக்குறைவால் உயிரிழந்தசப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதிஉதவி:சக போலீசார் வழங்கினர்
கூடலூரில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதி உதவியை சக போலீசார் வழங்கினர்.
தேனி
கூடலூரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் 1993-ம் ஆண்டு போலீஸ் பணிக்கு சேர்ந்தார். அவர், லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவர், உடல் நலக்குறைவால் கடந்த ஜூலை மாதம் உயிரிழந்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் 1993-ம் ஆண்டு பணியில் சேர்ந்து காக்கும் கரங்கள் என்ற பெயரில் உதவிகள் செய்து வரும் போலீசார் அடங்கிய குழுவினர், சந்திரசேகர் குடும்பத்திற்காக நிதி திரட்டினர். தமிழகம் முழுவதும் உள்ள சக போலீசாரிடம் ரூ.7 லட்சத்து 4 ஆயிரத்து 500 நிதி திரட்டினர். அந்த நிதியை சந்திரசேகரின் குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அப்போது காக்கும் கரங்கள் குழுவின் போலீசார் பாரதிமுருகன், தமிழரசன், சத்தியமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story