உடுமலை நகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


உடுமலை நகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
x

உடுமலை நகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

திருப்பூர்

உடுமலை நகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.உடுமலை நகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 அவை வீதிகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அதனால் நாய்கள் கூட்டமாக வருவதைப் பார்க்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணபல்லடத்தில், கடைகளில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு துறையினர் 200 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.விகள் அச்சமடைகின்றனர். நாய்கள் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்கு முன்பு படிக்கட்டுகளிலும் படுத்துக்கொள்கின்றன.

இந்த நிலையில் உடுமலை ராஜலட்சுமி நகர் குடியிருப்பு பகுதியிலும் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த குடியிருப்பு பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளி பகுதியிலும் நாய்கள் கூட்டம் உள்ளது. அவை பள்ளிக்குள் வந்துவிடாதபடி நுழைவு வாயில் (மெயின் கேட்) பூட்டிவைக்கப்படுகிறது. கதவு பூட்டப்பட்டிருக்கும் நிலையில் நாய்கள் அந்த கதவுக்கு முன்பு வெளிப்பகுதியில் படுத்து கிடக்கின்றன. அதனால் பள்ளிவிட்டதும், குழந்தைகளை அழைத்து செல்வதற்கு பெற்றோர்கள் வந்திருந்தாலும், மாணவ-மாணவிகள் வெளியே வர அச்சப்படுகின்றனர்.

அதனால் உடுமலை பகுதியில் நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Related Tags :
Next Story