"மக்கள் பிரதிநிதியை புறக்கணிக்காதீர்கள்" - அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.
தனது தொகுதியில் தனக்கு தெரியாமல் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் தரப்படுவதாக அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ. கூறினார்.
கோவை,
கோவை தென்செங்கம்பாளையத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது தொகுதியில் தனக்கு தெரியாமல் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் தரப்படுவதாக கூறினார்.
மேலும் மக்கள் பிரதிநிதியை புறக்கணிக்க வேண்டாம் என பகிரங்கமாக கல்வித்துறை அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். தான் யாரையும் வேறுபடுத்தி பார்ப்பது இல்லை என்று தெரிவித்த அவர், எந்த நலத்திட்டமாக இருந்தாலும், மக்கள் பிரதிநிதிகளை அழைத்து வழங்குமாறு கூறினார்.
Related Tags :
Next Story