நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு


நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு
x

கோப்புப்படம் 

நாமக்கல் மண்டலத்தில் 515 காசுக்கு விற்கப்பட்ட முட்டை விலை, 5 காசு உயர்த்தி 520 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் இருந்து தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 4 கோடிக்கும் அதிகமாக இங்கு முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்கிறது.

அதன்படி நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விரிவாக விவாதித்தனர். இதை அடுத்து 515 காசுக்கு விற்கப்பட்ட முட்டை விலை, 5 காசு உயர்த்தி 520 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் காசுகளில் வருமாறு, சென்னை-540 காசுகள், ஹைதராபாத்-485, விஜயவாடா-504, பார்வாலா-504, மும்பை-550, மைசூர்-525, பெங்களூரு-525, கொல்கத்தா- 573, டில்லி-530 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல நாமக்கல்லில் பண்ணையாளர்கள் வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் முட்டை கோழி விலையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் கிலோவுக்கு ரூ.95 என்ற அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலையிலும் எந்தவித மாற்றமும் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story