நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்வு


நாமக்கல் மண்டலத்தில்  முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்வு
x

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்வு

நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 510 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முட்டை கொள்முதல் விலை 520 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனிடையே கறிக்கோழி கிலோ ரூ.129-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கறிக்கோழி விலை கிலோ ரூ.131 ஆக உயர்ந்தது. முட்டைக்கோழி கிலோ ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story