நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 30 காசுகள் குறைந்தது 490 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 30 காசுகள் குறைந்தது 490 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 520 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 30 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை விலை 490 காசுகளாக குறைந்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.100-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.105-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
பிற மண்டலங்களில் முட்டை கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால், அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டையின் கொள்முதல் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். 5 சதவீதம் உற்பத்தி அதிகரிப்பு, ஆடி மாதம் நெருங்கி வருவது போன்றவையும் முட்டை கொள்முதல் விலை வீழ்ச்சிக்கு காரணம் என கூறப்படுகிறது. கடந்த 8-ந் தேதி முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் குறைக்கப்பட்டது. 3 நாட்களில் மேலும் 30 காசுகள் குறைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.