திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்


திருச்செங்கோடு   லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்
x

திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்

நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் சங்க தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். 2,521 உறுப்பினர்களை கொண்ட சங்கத்திற்கு எஸ்.சி.எம். முருகேசன் தலைமையில் ஒரு அணியினரும், கே.பி.ஆர். என்ற பி.மூர்த்தி தலைமையில் மற்றொரு அணியினரும் போட்டியிட்டனர். தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர், உப செயலாளர் மற்றும் 15 நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

தலைவர் பதவிக்கு எஸ்.சி.எம் முருகேசன் மற்றும் கே.பி.ஆர் மூர்த்தி, செயலாளர் பதவிக்கு முருகேசன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு சுப்பிரமணியம் மற்றும் செல்வராஜ் ஆகியோரும், உப தலைவர் பதவிக்கு ராயல் பிரபு மற்றும் சங்கர் ஆகியோரும், உப செயலாளர் பதவிக்கு லட்சுமி சரவணன் மற்றும் செல்வராஜ் ஆகியோரும் போட்டியிட்டனர். நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவிக்கு 2 அணியில் இருந்தும் தலா 15 பேர் போட்டியிட்டனர். இதுதவிர பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு தனியாக ஒருவர் போட்டியிட்டார்.

மொத்தம் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு 31 பேர் அடங்கிய வாக்குசீட்டும், 5 பொறுப்புகளுக்கு தனிதனியாக 5 வாக்கு சீட்டுகளும் என ஒவ்வொரு உறுப்பினரும் 20 வாக்குகள் செலுத்தினர். அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் மகாசபை கூட்டம் வருகிற 7-ந் தேதி திருச்செங்கோட்டில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story