மயிலாடுதுறை-திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


மயிலாடுதுறை-திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

மயிலாடுதுறை-திண்டுக்கல் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கோட்டை வரை நீட்டக்கப்பட்டதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மயிலாடுதுறை-திண்டுக்கல்-மயிலாடுதுறை(வண்டி எண்: 16847/16848) இடையே இயக்கப்படும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரை-செங்கோட்டை-மதுரை (06665/06662) இடையே இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் இணைக்கப்பட்டு செங்கோட்டை வரை நீட்டிக்க ரெயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.

இதுபோல் மயிலாடுதுறை-திண்டுக்கல் (வண்டி எண்: 16847) இடையே இயக்கப்படும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 24-ந்தேதி முதல் செங்கோட்டை வரை நீட்டித்து இயக்கப்படும். மறுமார்க்கமாக செங்கோட்டை-மயிலாடுதுறை(16848) இடையே தினசரி எக்ஸ்பிரஸ் வருகிற 25-ந்தேதி முதல் நீட்டிக்கப்பட்டு, செங்கோட்டையில் இருந்து இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story