விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்- பி.ஆர்.பாண்டியன்


விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்- பி.ஆர்.பாண்டியன்
x
தினத்தந்தி 24 Jan 2023 7:15 PM GMT (Updated: 2023-01-25T00:46:21+05:30)

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

நாகப்பட்டினம்

நாகையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விளை பொருட்கள் உற்பத்தி அதிகமாக இருக்கும்போது அவற்றை தடையின்றி ஏற்றுமதி செய்யவும், பற்றாக்குறை காலத்தில் தேவையான உணவு பொருட்களை இறக்குமதி செய்யயும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் லாபகரமான விலை கிடைக்காமல் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் பொருளாதாரத்தில் நலிவடைந்து வருகிறார்கள். எனவே மத்திய அரசு உடனடியாக விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

விவசாயிகள் கோரிக்கைகளை சட்டமாக்கி நிறைவேற்ற வலியுறுத்தி வரும் மார்ச் 1-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு யாத்திரை மேற்கொள்ளப்பட உள்ளது. மார்ச் 21-ந் தேதி டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்துடன் யாத்திரையானது நிறைவு பெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story