சாலையில் நெல்லை கொட்டி வைத்து பல நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள்

சாலையில் நெல்லை கொட்டி வைத்து பல நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள்
x

சாலியமங்கலத்தில் சாலையில் நெல்லை கொட்டி வைத்து பல நாட்களாக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். எனவே அதிகாாிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

மெலட்டூர்;

சாலியமங்கலத்தில் சாலையில் நெல்லை கொட்டி வைத்து பல நாட்களாக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். எனவே அதிகாாிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல் சாகுபடி

பாபநாசம் தாலுகா சாலியமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் கோடை பருவத்தில் பம்பு செட் உதவியுடன் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடை பருவத்தை எட்டியுள்ள நிலையில் விவசாயிகள் தற்போது அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.விவசாயிகள் அறுவடை செய்யக்கூடிய நெல்லை அருகில் உள்ள நெடுஞ்சாலையில் நன்கு உலர வைத்து பின்னர் உலர்ந்த நெல்லை சாலியமங்கலம் அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

விரைவில் கொள்முதல்

சாலியமங்களம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய நெல்லை கொட்டி வைக்க இடமில்லாததால் அருகில் நெடுஞ்சாலையில் கொட்டி வைத்து விற்பனைக்காக காத்து கிடக்கின்றனர். விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவரக்கூடிய நெல்லை உடனுக்கு உடன் கொள்முதல் செய்யாமல் 4 அல்லது 5 நாட்கள் காத்திருக்க வைத்து தான் கொள்முதல் செய்வதாக கூறுகிறார்கள். எனவே நெல்லை உடனுக்கு உடன் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story