கோவில்களில் நேற்று ஆருத்ரா தரிசன விழா


கோவில்களில் நேற்று ஆருத்ரா தரிசன விழா
x

உடுமலை, மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர்

உடுமலை, மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆருத்ரா தரிசன விழா

ஆதிசேஷனுக்காக சிவபெருமான் அற்புத நடனம் ஆடிக்காட்டிய மார்கழி மாதத்தின் திருவாதிரை நட்சத்திர நாள் ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் விரதம் இருந்து ஆருத்ரா தரிசனத்தைக் கண்டு களித்தால் சகல விதமான நன்மைகளும் கிடைப்பதுடன் பிறவிப் பிணி நீங்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

அந்தவகையில் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளிலுள்ள சிவன் கோவில்களில் நேற்று ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்பட்டது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள சிவகாமி அம்மன் சமேத சிதம்பரேஸ்வரருக்கு நேற்று காலை 5 மணியளவில் அபிஷேகம், அலங்காரத்தைத் தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சாமி தரிசனம்

இதனைத் தொடர்ந்து காலை 10 மணி அளவில் சாமி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோல கொழுமம் தாண்டேஸ்வரர் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சோமவாரப்பட்டி அமரபுயங்கரீஸ்வரர்

 இதுபோல் குடிமங்கலத்தை அடுத்த சோமவாரப்பட்டியில் மிகவும் புகழ்பெற்ற அமரபுயங்கரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அமரபுயங்கரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.

விழாவை முன்னிட்டு சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story