மின்சாரம் தாக்கி இறந்த சிறுவன் குடும்பத்துக்கு நிதி உதவி


மின்சாரம் தாக்கி இறந்த சிறுவன் குடும்பத்துக்கு நிதி உதவி
x

பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி இறந்த சிறுவன் குடும்பத்துக்கு நிதி உதவி அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடி அருகே உள்ள மேலாயக்குடி கிராமத்தில் கடந்த 7-ந் தேதி இரவு கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த உறியடி நிகழ்ச்சியில் மின்சாரம் பாய்ந்து பரமக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் கபிலேஷ் (7) என்ற சிறுவன் உயிரிழந்தான். அவனது அண்ணன் கோகுல் ராகுல் (10) படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். மின்சாரம் தாக்கி பலியான சிறுவனின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. அந்த நிதியை டாக்டர் திலீப் ராஜ கண்ணப்பன் அவரது குடும்பத்தாரிடம் வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக உதவியாளர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story