மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க மாணவிக்கு நிதி உதவி
வடமதுரை அருகே உள்ள மாணவிக்கு மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க நிதி உதவி அளிக்கப்பட்டது.
வடமதுரை அருகே உள்ள லக்கன் தெருவை சேர்ந்த முனியாண்டி மகள் கலைச்செல்வி (வயது 18). மாற்றுத்திறனாளி. இவர் வடமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 493 மதிப்பெண்கள் பெற்றார். அதன்பின்னர் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று 'நீட்' தேர்வு எழுதி 119 மதிப்பெண்கள் பெற்றார். அவருக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக இ்ன்று (வியாழக்கிழமை) கலந்தாய்வு நடைபெறுகிறது. ஏழ்மை காரணமாக சேர்க்கை கட்டணம் கட்ட முடியாமல் கலைச்செல்வியின் குடும்பத்தினர் தவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணியின் உத்தரவின்பேரில், வடமதுரை தி.மு.க. நகரச் செயலாளர் கணேசன், மாணவிக்கு நிதி உதவி வழங்கினார். அதனைத்தொடர்ந்து சென்னை கிண்டியில் நடைபெறும் கலந்தாய்வுக்கு மாணவி தனது பெற்றோருடன் நேற்று புறப்பட்டு சென்றார்.