வரத்து அதிகரிப்பால் மீன்கள் விலை குறைவு

வரத்து அதிகரிப்பால் மீன்கள் விலை குறைவு
x

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு நேற்று 100 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தது. வரத்து அதிகரிப்பால் மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது.

திருப்பூர்

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு நேற்று 100 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தது. வரத்து அதிகரிப்பால் மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது.

மீன் வரத்து அதிகம்

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டிற்கு தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சனி, ஞாயிறுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் மீன்கள் விற்பனை அதிகமாக நடைெபறுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி 100 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வரத்து அதிகம் என்பதால் மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது.

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு நேற்று 100 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தது. வரத்து அதிகரிப்பால் மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது.

கிலோ ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்ட மீன்களின் விவரம் வருமாறு:-

வஞ்சிரம் சிறியது ரூ.350, பெரியது ரூ.650-க்கும், நண்டு சிறியது ரூ.250, பெரியது ரூ.450-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஊளி ரூ.300-க்கும், அயிலை ரூ.150-க்கும், மத்தி ரூ.80-க்கும், பாறை ரூ.350-க்கும், முரல் ரூ.300-க் கும், வௌமீன் ரூ.400-க்கும், ரோகு ரூ.140-க்கும், நெய்மீன் ரூ.100-க்கும், டேம்பாறை ரூ.130-க்கும், இறால் ரூ.350 முதல் ரூ.450 வரையும் விற்பனையானது.

மீன்களின் விலை கிலோவிற்கு ரூ.30 முதல் ரூ.50 வரை குறைந்திருக்கிறது. ஆனால் கடந்த வாரம் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு திரும்பி வராத காரணத்தால் மீன் மார்க்கெட்டிற்கு மக்கள் வருகை குறைந்தது. இதனால் விற்பனை குறைந்துள்ளது என மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story