கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம்.. பணிகளை தொடங்கிய தமிழக அரசு
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக திட்ட இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தொழில்நுட்ப வல்லுனர்கள், விமான ஓடுதள பாதையை ஆய்வு செய்தனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைப்பதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பான செய்தி அறிக்கையில், கோவில்பட்டியில் பறக்கும் பயிற்சி அமைப்பை நிறுவுதலுக்கான ஆன்லைன் டெண்டர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தோணுகால் ஊராட்சி பகுதியில் உள்ள விமான ஓடுதளத்தை, விமான பயிற்சி மையத்துக்கு பயன்படுத்தப்படும் என அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக விமான ஓடுதள பாதையை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக திட்ட இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தொழில்நுட்ப வல்லுனர்கள், விமான ஓடுதள பாதையை ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story