சீர்காழி அருகே 5-வது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கு - கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு
கிராமங்களுக்கு இடையிலான சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் 5-வது நாளாக வெள்ளப்பெருக்கு தொடர்கிறது. ஆற்றின் கரையோரத்தை ஓட்டியுள்ள நாதல்படுகை, வெள்ளை மணல், கோரைத்திட்டு உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கிராமங்களுக்கு இடையிலான சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை கயிறு கட்டி மீட்கும் பணிகளில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story