இரட்டை கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
இரட்டை கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த பெரியவளையம் கிராமத்தில் கடந்த 22.10.2022 அன்று தைல மரக்காட்டிற்கு காளான் பறிக்கச் சென்ற, அதே பகுதியை சேர்ந்த 2 பெண்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கழுவந்தோண்டி கிராமம் ஏரிக்கரை தெருவை சேர்ந்த பால்ராஜ்(வயது 39) எனபவரை கடந்த 26.10.2022 அன்று போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் இவர் வெளியே வந்தால் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடும் என்பதால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி பால்ராைஜ குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான ஆணை பிரதிகள் திருச்சி மத்திய சிறையில் வழங்கப்பட்டன.