தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு..!


தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு..!
x

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

சென்னை,

தங்கத்தின் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி ஒரு கிராம் ரூ.77.80 -க்கும், ஒரு கிலோ ரூ.77,800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story