அரசு பணியாளர் சங்க மாநாடு
விழுப்புரத்தில் அரசு பணியாளர் சங்க மாநாடு நடைபெற்றது.
விழுப்புரம்,
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் செஞ்சட்டை மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு அரசு பணியாளர் சங்க மாநில சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், டாஸ்மாக் நிறுவனம் தொடங்கி 19 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருப்பினும் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவில்லை. பார் உரிமையாளர்களின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கண்டு கொள்ளாமல் இருக்கும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரை இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும் அனுமதி இல்லாமல் பார்கள் திறக்கப்பட்டு வருவதால், அரசுக்கு வருவாய் குறைந்து வருகிறது. எனவே அனுமதியோடு இயங்கும் பார்கள். அனுமதி இல்லாமல் செயல்படும் பார்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 19 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் 5 மையங்களில் பணியாளர் சந்திப்பு மற்றும் பிரசார இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளது என்றார். இதில் டாஸ்மாக் மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.