அமைச்சரவையில் தலையிடும் அதிகாரம் இல்லை என்பதை கவர்னர் உணர்ந்து கொண்டுள்ளார்: சபாநாயகர் அப்பாவு


அமைச்சரவையில் தலையிடும் அதிகாரம் இல்லை என்பதை கவர்னர் உணர்ந்து கொண்டுள்ளார்: சபாநாயகர் அப்பாவு
x

ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்று, நான்கரை மணி நேரத்தில் கவர்னர் தெரிந்து கொண்டதாக சபாநாயகர் அப்பாவு பேசியுள்ளார்.

நெல்லை,

தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவை கவர்னரே நிறுத்திவைத்துள்ளது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் கூறியயதாவது;

"கவர்னர் ஒருவருக்கு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் இல்லை என்பதை நான்கரை மணி நேரத்தில் தெரிந்துகொண்டனர். அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் உரிமை கவர்னருக்கு கிடையாது.

கவர்னருக்கு எந்தெந்த உரிமைகள் உள்ளது என்பதை சமீபத்தில் கூட சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. யாரெல்லாம் அமைச்சராக செயல்படுவார்கள் என்ற பரிந்துரையை முதல் அமைச்சர் கவர்னரிடம் கொடுப்பார். அந்த பரிந்துரையை ஏற்று கவர்னர் பதவிப்பிரமாணம் செய்துவைப்பார். அவ்வளவு தான்.

அந்த பதவியை அமைச்சர்கள் தானாக ராஜினாமா செய்யலாம், அல்லது பதவியை விட்டு விலக முதல் அமைச்சர் அறிவுரை கூறலாம். இதை தவிற யாருக்கும் உரிமை கிடையாது. அதற்கு மேல் நீதிமன்றத்தில் வழக்குகள் தண்டிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

கவர்னர் நல்லவர். உணர்ச்சிவசப்பட்டு, உணர்வின் வெளிப்பாடு காரணமாக் அவர் நேற்று இத்தகைய நடவடிக்கை எடுத்திருக்கலாம். சட்டத்தின்படி அவர் நடந்தால் அவர் அளித்துவரும் பதவிக்கு மாண்பாக இருக்கும்." இவ்வாறு சபாநாயகர் அப்பாவு பேசினார்.


Next Story