காதலரை கரம்பிடித்த பட்டதாரி பெண்


காதலரை கரம்பிடித்த பட்டதாரி பெண்
x

கைக்குழந்தையுடன் காதலரை கரம்பிடித்த பட்டதாரி பெண்ணுக்கு ஜெயங்கொண்டம் மகளிர் போலீசார் அறிவுரை வழங்கினர்.

அரியலூர்

திருமணத்திற்கு மறுப்பு

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குட்டக்கரை காலனி தெருவை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் சந்துரு (வயது 24). டிப்ளமோ படித்த இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வில்வகுளம் ரெட்டித்தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் பட்டதாரியான நர்மதாவிடம் (21) கடந்த ஒரு ஆண்டாக நெருங்கி பழகி வந்துள்ளார்.

இந்தநிலையில் அந்தப்பெண்ணுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து சந்துருவை திருமணம் செய்ய கேட்டபோது அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

திருமணம்

இந்த சம்பவம் குறித்து நர்மதா அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து விசாரித்தனர். இதில் அவர்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவர்களது பெற்றோருக்கு அறிவுரை கூறினர்.

இதனைதொடர்ந்து நர்மதாவை ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து சந்துரு திருமணம் செய்தார். பின்னர் இருவரும் திருமண கோலத்தில் கைக்குழந்தையுடன் ஜெயங்கொண்டம் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.


Next Story