பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி


பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
x

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

சென்னை

வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இன்னர் வீல் கிளப் ஆப் மெட்ராஸ் இணைந்து ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடத்திய சென்னை பள்ளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். அப்போது, அவர் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டி புத்தகத்தை வழங்கி உரையாற்றினார்.

சாம்ஸ்கிரியா பவுண்டேஷன் மூலம் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று மற்றும் இன்று(செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நேரடி நிகழ்ச்சியாகவும், செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கம் மற்றும் தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்திலும் ஆன்லைன் நிகழ்ச்சியாகவும் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

1,186 மாணவர்கள்

இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் 7 சென்னை பள்ளிகளைச் சேர்ந்த 431 மாணவர்கள், செனாய் நகர் அம்மா அரங்கத்தில் 13 சென்னை பள்ளிகளைச் சேர்ந்த 431 மாணவர்கள் மற்றும் தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராய அரங்கில் 9 சென்னை பள்ளிகளைச் சேர்ந்த 324 மாணவர்கள் என மொத்தம் ஆயிரத்து 186 உயிரியல் பாடப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் 456 மாணவர்கள், செனாய் நகர் அம்மா அரங்கத்தில் 353 மாணவர்கள் என மொத்தம் 809 கணினி அறிவியல் பாடப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைய உள்ளனர்.


Next Story