தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம்


தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம்
x
தினத்தந்தி 30 July 2023 2:51 PM IST (Updated: 30 July 2023 5:51 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.

அதே வேளையில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. சில இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Next Story