பனைக்குளம் பகுதிகளில் பலத்த மழை
பனைக்குளம் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம்
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெய்யும். தென்மேற்கு பருவமழையின்போது மாவட்டத்தில் ஓரளவு மழை பெய்யும். இந்த ஆண்டு வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி 3 நாட்களாகிய நிலையில் பனைக்குளம், தேர்போகி, பழைய தேர்போகி, சித்தாரைக்கோட்டை, கோப்பேரிமடம், தேவிபட்டினம் பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
கடந்த சில மாதங்களாகவே வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் ராமநாதபுரம் நகர் பகுதியில் சாரல் மழை பெய்தது. ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
Related Tags :
Next Story