புனித அதிசய மாதா தேர் பவனி
புனித அதிசய மாதா தேர் பவனி நடைபெற்றது.
புதுக்கோட்டை
ஆலங்குடியில் உள்ள புனித அதிசயமாதா ஆலய தேர் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, புதுக்கோட்டை மறைவட்ட அதிபர் சவரிநாயகம் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார். இதனைதொடர்ந்து நேற்று இரவு திருப்பலி நடைபெற்றது. பின்னர் அருட்தந்தை ஆர்.கே. அடிகளார் தலைமையிலும், அருட்தந்தை சித்தேரிமுத்து முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அதிசய மாதா சொரூபம் வைக்கப்பட்டது. பின்னர் இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று தேவாலயத்தில் நிறைவடைந்தது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறுவர்-சிறுமியர்களுக்கான திவ்ய நற்கருணை விழா நடைபெறுகிறது.
Related Tags :
Next Story