பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்படி?


பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்படி?
x

பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்படி? என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கரூர்

சோழர்களின் வரலாறு

நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்போடு திரைக்கு வந்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்த கரூர் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-கரூர் தாந்தோணிமலையை சேர்ந்த சந்திரசேகர்:- கி.பி. 10-ம் நூற்றாண்டில் நடைபெற்ற ஒரு கதையை படமாக்கி உள்ளனர். இக்கதை கடந்த 1950-1955-ம் ஆண்டுகளில் நாவலாக வெளி வந்துள்ளது. இக்கதையை புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்வதில் இருக்கும் உத்வேகம் இப்படத்தைப் பார்த்து தெரிந்து கொள்வதில் சற்று குறைவு. சோழ அரசர்களின் வரலாறுகளை எடுத்து கூறும் படமாக உள்ளது.

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்

கரூர் சின்னம்மநாயக்கன் பட்டியை சேர்ந்த கனகராஜ்:- பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஆதித்யா கரிகாலன் வேடத்தில் நடித்திருப்பது மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரகுமானின் இசை அனைவராலும் பாராட்டத்தக்கது. பண்டைக் காலத்தில், தமிழர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக கண்முன் படம் பிடித்து காட்டியதை காண முடிந்தது. குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம்.

நன்றாக உள்ளது

குளித்தலையை சேர்ந்த பட்டதாரி வாலிபர் கார்த்தி:-நான் பொன்னியின் செல்வன் கதையை ஓரளவு படித்துள்ளேன். இந்த படத்தை தியேட்டரில் பார்த்தபோது உண்மை கதையில் இருந்து ஒரு சில மாற்றங்கள் திரைப்படத்தில் காண முடிந்தது. திரைப்படம் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது.வெள்ளியணை அருகே உள்ள செல்லாண்டிபுரம் ஹம்சவர்த்தன்:- பொன்னின் செல்வன் படம் நன்றாக உள்ளது. இந்த நாவல் படிக்காதவர்களும் படத்தை பார்த்து எளிதில் புரிந்து கொள்ளலாம். படம் பார்த்த பின் 2-வது பாகம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story