சட்டவிரோத மணல் விற்பனை; அமலாக்கத்துறையின் மனு சுப்ரீம் கோர்ட்டில் 23-ந்தேதி விசாரணை


சட்டவிரோத மணல் விற்பனை; அமலாக்கத்துறையின் மனு சுப்ரீம் கோர்ட்டில் 23-ந்தேதி விசாரணை
x

அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது நாளை மறுதினம் விசாரணை நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. மேலும், மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான விவரங்களுடன் நேரில் ஆஜராகுமாறு 5 மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இதனிடையே மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அமலாக்கத்துறையின் சம்மன்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது நாளை மறுதினம் (23-ந்தேதி) விசாரணை நடைபெற உள்ளது.




Next Story