முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது

தேனி

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன மற்றும் நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. இந்த அணையின் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இரு போக பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதற்கிடையே நேற்று முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.50 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 2,738 கன அடியாகவும் இருந்தது. இந்நிலையில் இன்று நீர்வரத்து வினாடிக்கு 5,258 கன அடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் 130.85 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1722 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.


Next Story