சர்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
சர்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அரியலூர்
ஐக்கிய நாடுகள் பொது சபை 1948-ம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தினத்தை பிரகடனப்படுத்தியது. அதனை தொடர்ந்து 1950-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ந் தேதி சர்வதேச மனித உரிமைகள் தின நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் சர்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணர்வு உறுதிமொழி நேற்று ஏற்கப்பட்டது. இதில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையிலும், அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையிலும் அனைத்து துறை அலுவலர்கள் சர்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இதேபோல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் போலீசாரும் சர்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.
Related Tags :
Next Story