சர்வதேச யோகா தின விழா
சர்வதேச யோகா தின விழா நடந்தது.
சர்வதேச யோகா தின விழாவை முன்னிட்டு உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்பேரில் பெரம்பலூரில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீஸ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மகிளா கோர்ட்டு அமர்வு நீதிபதி முத்துகுமரவேல், குடும்ப நல கோர்ட்டு நீதிபதி தனசேகரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான லதா, சார்பு நீதிமன்ற நீதிபதி அண்ணாமலை, மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜமகேஸ்வர், நீதித்துறை நடுவர்கள், வேப்பந்தட்டை மற்றும் குன்னம் உரிமையியல் நீதித்துறை நடுவர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்கம், அட்வகேட் அசோசியேசன் ஆகியவற்றின் நிர்வாகிகள், வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர், விளையாட்டு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
மைசூரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி உரையாற்றியது காணொலி மூலம் ஒளிபரப்பப்பட்டது. இதில் யோகா பயிற்றுனர்கள் அன்பரசு மற்றும் தமிழ் ஆகியோர் யோகாசன பயிற்சிகளை அளித்தனர். இதேபோல் பெரம்பலூரில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் தலைமை தபால் அதிகாரி பெரியசாமி தலைமையில் தபால் அலுவலக ஊழியர்கள், தபால்காரர்கள் யோகாசனம், தியானப்பயிற்சி மேற்கொண்டனர். மனம் மற்றும் உடலை ஒருநிலைப்படுத்தும் யோகமுத்திரைகள் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதில் தபால்துறை புறநிலை ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் விஷ்ணுதேவன் உள்பட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.