கடலூரில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது


கடலூரில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது
x

கடலூரில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

கடலூர்


நேற்றும் தொடர்ந்து கடலூரில் 3-வது நாளாக 104 டிகிரி வெயில் பதிவாகியது. இதை மதியத்துக்கு பிறகே உணர முடிந்தது. காலையில் சற்று வெப்பம் குறைந்திருந்த நிலையில் மதியம் 2 மணிக்கு பிறகு வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருக்க முடியாமலும், வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். வீடுகளில் மின்விசிறியை சுழல விட்டால் அனல் காற்று தான் வீசியது.இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டனர். குளிர்சாதன வசதி கொண்ட பொதுமக்கள் மட்டும் அதை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததை காண முடிந்தது.

சில்வர் பீச்சில் குவிந்தனர்

மாலை 4 மணிக்கு பிறகு வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக கடலூர் சில்வர் பீச்சுக்கு ஏராளமான பொதுமக்கள் வரத் தொடங்கினர். மாலை 5 மணிக்கு பிறகு கூட்டம் அதிகரித்தது. குடும்பம், குடும்பமாக வந்து சில்வர் பீச்சில் குளித்து மகிழ்ந்தனர். சிலர் கால்களை மட்டும் நனைத்து மகிழ்ச்சியடைந்தனர். சிலர் கடற்கரையில் அமர்ந்து காற்று வாங்கினர். இது தவிர வெப்பத்தின் சூட்டை தணிப்பதற்காக குளிர்பானம், இளநீர், சர்பத், நுங்கு உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது. இந்த வெப்பம் மேலும் சில நாட்கள் நீடிக்க வாய்ப்புள்ளதாக கடலூர் வானிலை மைய அதிகாரி பாலமுருகன் தெரிவித்துள்ளார்.


Next Story