குன்னம் வட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்


குன்னம் வட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்
x

குன்னம் வட்டத்தில் ஜமாபந்தி தொடங்கியது.

பெரம்பலூர்

குன்னம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி சந்திரமோகன் தலைமையில், குன்னம் தாசில்தார் அனிதா முன்னிலையில் நடைபெற்றது. ஜமாபந்தியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்த வருவாய் தீர்வாயம் நேற்று முதல் தினந்தோறும் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும். நேற்று வடக்கலூர் பிர்காவிற்கு உட்பட்ட திருமாந்துறை, பெண்ணகோணம் (வடக்கு), பெண்ணகோணம் (தெற்கு), வடக்கலூர், ஒகளுர் (மேற்கு), ஒகளுர் (கிழக்கு), சு.ஆடுதுறை, அத்தியூர் (வடக்கு), அத்தியூர் (தெற்கு), கிழுமத்தூர் (வடக்கு), கிழுமத்தூர் (தெற்கு), அகரம்சிகூர், வசிஸ்டபுரம், கீழப்பெரம்பலூர், வயலப்பாடி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், இன்று 26-ந் தேதி கீழப்புலியூர் பிர்காவிற்கு உட்பட்ட நன்னை (கிழக்கு), நன்னை (மேற்கு), பெருமத்தூர் (வடக்கு), பெருமத்தூர் (தெற்கு), சிறுமத்தூர், கீழப்புலியூர் (வடக்கு), கீழப்புலியூர் (தெற்கு), எழுமூர் (மேற்கு), மழவராயநல்லூர், எழுமூர் (கிழக்கு), ஆண்டிக்குரும்பலூர், அசூர், சித்தளி (கிழக்கு), சித்தளி (மேற்கு), பேரளி (வடக்கு), பேரளி (தெற்கு), ஒதியம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 27-ந் தேதி வரகூர் பிர்காவிற்கு உட்பட்ட ஓலைப்பாடி (கிழக்கு), ஓலைப்பாடி (மேற்கு), பரவாய் (மேற்கு), பரவாய் (கிழக்கு), புதுவேட்டக்குடி, துங்கபுரம் (வடக்கு), துங்கபுரம் (தெற்கு), காடூர் (வடக்கு), காடூர் (தெற்கு), கொளப்பாடி, வரகூர், குன்னம், பெரியம்மாபாளையம், பெரிய வெண்மணி (மேற்கு), பெரிய வெண்மணி (கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் நடைபெறுகிறது. ஜமாபந்தி இறுதிநாளான 27-ந் தேதி அன்று குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிமக்கள்மாநாடு பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி சந்திரமோகன் தலைமையில் நடைபெறும். ஜமாபந்தியில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்வார்கள் எனவே பொதுமக்கள் ஜமாபந்தியில் பட்டா, பட்டா மாறுதல், பெயர் மாறுதல், நில அளவை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட தனிப்பட்ட கோரிக்கை மற்றும் பொதுவான கோரிக்கை மனுக்களை அளித்து உடனடித்தீர்வு காணலாம் என குன்னம் தாசில்தார் அனிதா தெரிவித்தார்.


Next Story