ஜெயலலிதா நினைவு தினம் - தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நினைவஞ்சலி


ஜெயலலிதா நினைவு தினம் - தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நினைவஞ்சலி
x

கோப்புப்படம்

முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவு தினத்தில் தெலங்கானா கவர்ன தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 2016 ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை...துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவு தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




Next Story