கரூர்: சின்னமலைபட்டியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாததால் மாணவன் தற்கொலை


கரூர்: சின்னமலைபட்டியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாததால் மாணவன் தற்கொலை
x

கரூர் மாவட்டம் சின்னமலைபட்டியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கரூர்,

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சின்னமலைபட்டியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சின்னமலைபட்டியைச் சேர்ந்த கூலித்தொழி தம்பதி வீரமணி, மல்லிகா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இவர்களது மகன் சிவா அருகிலுள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். சிவா கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியானது.

சிவா தேர்வில் 500-க்கு 158 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ் மற்றும் கணிதப் பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார். இந்த நிலையில் தமிழ், கணிதப் பாடங்களில் தோல்வியடைந்த விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கிட்டு சிவா தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story